சினிமா

விக்னேஷ் சிவனின் தங்கை, நயனின் நாத்தனாரை பார்த்துருக்கீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

விக்னேஷ் சிவனின் தங்கை, நயனின் நாத்தனாரை பார்த்துருக்கீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதிக்கு சென்று தரிசனம் மேற்கொண்டுள்ளனர். மேலும் நேற்று செய்தியாளர்களை சந்தித்து நன்றி கூறினர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது அம்மா மற்றும் தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா தங்களது திருமண பரிசாக விக்னேஷ் சிவனின் தங்கைக்கு 30 பவுன் தங்க நகைகளை அளித்ததாக தகவல்கள் வெளிவந்தது. இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது அம்மா மற்றும் தங்கை மீது அளவற்ற பாசம் கொண்டவராம். அவர்களைப் பார்த்துக் கொள்வது போலவே தன்னையும் பார்த்துக் கொள்வார் என்றே நயன்தாரா அவரை காதலித்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


Advertisement