சினிமா

பழம்பெரும் பிரபல முன்னணி நடிகர் காலமானார்! திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீருடன் இரங்கல்!!

Summary:

பழம்பெரும் பிரபல முன்னணி நடிகர் காலமானார்! திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீருடன் இரங்கல்!!

தமிழ் சினிமாவில் 1965ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற வெண்ணிற ஆடை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இப்படத்தின் மூலம் பிரபலமடைந்த அவர் அதனை தொடர்ந்து ரசிகர்களால் வெண்ணிற ஆடை ஸ்ரீகாந்த் என்று அழைக்கப்பட்டார். இவர் 200க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

 மேலும் இவர் சிவாஜி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் 90களில் அதிரடி வில்லனாகவும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு தாவி குடும்பம் மற்றும் மங்கை போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் 83 வயது நிறைந்த பழம்பெரும் நடிகரான அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்தநிலையில் நேற்று காலமாகியுள்ளார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement