"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
அடி தூள்.. வேற லெவல்! விஜய் குரலில் பட்டையை கிளப்பும் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல்.! கொண்டாடும் ரசிகர்கள்!!
தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் இந்த படத்தில் ஹீரோயினாக, விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம் , ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். மேலும் இதற்கு தமன் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து படம் வெளியாவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இன்று தமன் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பாடலில் விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் வெறித்தனமாக நடனமாடியுள்ளனர்.