அடேங்கப்பா..ஐபிஎல் போட்டி பார்க்க சென்ற வரலட்சுமியின் டி-ஷர்டில் இருப்பதை கண்டு புல்லரித்துப்போன ரசிகர்கள்.!
அடேங்கப்பா..ஐபிஎல் போட்டி பார்க்க சென்ற வரலட்சுமியின் டி-ஷர்டில் இருப்பதை கண்டு புல்லரித்துப்போன ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் சிம்புவுடன் இணைந்து 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். அதனை தொடர்ந்து அவர் தாரை தப்பட்டை படத்தின் மூலம் பெரும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவர் சர்க்கார், சண்டக்கோழி 2 ஆகிய படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
இவர் தற்போது ‘மாரி 2’ படத்தை தொடர்ந்து கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், காட்டேரி, ராஜபார்வை, கன்னித்தீவு’ என பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் பிரபல தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவ்வாறு பிஸியாக இருக்கும் நிலையிலும் அவர் ஐபிஎல் போட்டி பார்ப்பதற்காக மைதானத்திற்கு சென்றுள்ளார்.
நேற்று ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இந்நிலையில் இப்போட்டியை பார்க்க பல பிரபலங்களும் ரசிகர்களும் குவிந்திருந்தனர்.
இவர்களுடன் நடிகை வரலட்சுமியும் தனது நண்பர்களுடன் போட்டியை கண்டு மகிழ்ந்தார். மேலும் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பரம ரசிகையாக இவர் தோனியின் புகைப்படம் பதித்த மஞ்சள் நிற டி-சர்ட்டை அணிந்து போட்டியை காண வருகை தந்துள்ளார்.
இதனை அவரை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார் இந்நிலையில் இதனைக் கண்ட தோனி ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
#thalaaaaaadhonnniiiiii #csk #whistlepodu pic.twitter.com/uQBZeUyvKM
— varalaxmi sarathkumar (@varusarath) 1 May 2019