விஷாலுடன் காதல், விரைவில் திருமணமா? மனம் திறந்த வரலக்ஷ்மி, அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

விஷாலுடன் காதல், விரைவில் திருமணமா? மனம் திறந்த வரலக்ஷ்மி, அதிர்ச்சியில் ரசிகர்கள்.!



varalakshmi-talk-about-love-with-vishal

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் மற்றும் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி ஆகியோர் பல வருடங்களாக காதலித்து வருவதாக வதந்திகள் பரவியது. மேலும் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும் கிசுகிசுக்கள் வெளிவந்தன.

இந்நிலையில் தற்போது நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் விஷாலும் நானும் நல்ல நண்பர்கள்,எங்களுக்குள் காதல் இல்லை என உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வரலக்ஷ்மி கூறியதாவது, "நடிகர் விஷால் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். நாங்கள் இருவரும் எல்லா வி‌ஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்கள் எதுவும் உண்மை இல்லை."

"மேலும் விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்து கொண்டால் முதலில் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். ஆனால்  எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் எனக்கு புரியவில்லை," என வரலக்ஷ்மி கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.