சினிமா

நடிகை வரலட்சுமியின் வீடியோ பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்! வீடியோ இதோ!

Summary:

Varalakshmi sarathkumar stunt video goes viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் நடிகர் சரத்குமாரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது பல்வேரு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

சமீபத்தில் வெளியான சர்க்கார், மாறி 2 , சண்டக்கோழி 2 போன்ற மிக பெரிய படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் வரலக்ஷ்மி. தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் இவர் ஒரு படத்தில் ஸ்டண்ட் காட்சியில் நடித்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. ரோப் எதுவும் இல்லாமல் வரலக்ஷ்மி ஆண் ஒருவரை பறந்து பறந்து அடிக்கும் வீடியோ தான் அது.

இதை வீட்டில் யாரும் முயற்சித்து பார்க்காதீர்கள் என வரலக்ஷ்மி குறிப்பிட்டுள்ளார். 


Advertisement