சினிமா

வந்துட்டார்ல.... திரும்பவும் அதே சூப்பர் ஸ்டாரா....!

Summary:

vanthuttarla thirumpavum super star

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு உள்ளது.  அவர் படங்கள் தயாரிப்பாளர்களுக்கும்  விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. அவருக்கு தமிழகத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களும் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்களும் உள்ளன.

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார். மேலும் ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளார்கள்.  68 வயது தாண்டியும் இன்றும் தமிழ் சினிமாவில்  நம்பர் 1 இடத்திலேயே உள்ளார்.

Image result for 2.0 teaser

சமீப காலமாக தமிழ் சினிமாவில் டீசர் வெளியீடு பிரபலமாக உள்ளது. இந்நிலையில் 2.0 படத்தின் டீசர் 2டி, 3டி என இரண்டு முறைகளிலும் வெளிவந்து அசத்தியது. இதில் யுடியூபில் 2.0 தமிழ் டீசர் இன்று வரை அதாவது வெளிவந்து 5 நாட்கள் ஆகியும் முதலிடத்திலேயே உள்ளது.

இதற்கு முன் எந்த டீசரும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது இல்லையாம், இதன் மூலம்  ரஜினி என்றுமே நான் தான்  சூப்பர் ஸ்டார் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.


Advertisement