செம ஆக்ரோஷமாக நடிகை வனிதா வெளியிட்ட பதிவு!! இந்த உக்கட்ட கோபத்திற்கு காரணம் இதுதானா?

செம ஆக்ரோஷமாக நடிகை வனிதா வெளியிட்ட பதிவு!! இந்த உக்கட்ட கோபத்திற்கு காரணம் இதுதானா?


vanitha tweet against saravanan

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

தற்போது பிக்பாஸ் 3-வது சீசன் ஒரு மாதத்தை தாண்டிவிட்டது. ஒவ்வொரு சீசனிலும் சண்டை, சர்ச்சை, வாக்குவாதம் என ஏதாவது ஒரு வில்லங்கம் அரங்கேறி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களிடையே உரையாடுவார். 

saravanan

அப்போது கமல்ஹாசன், அரசுப் பேருந்துகளில் செல்லும் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். பெரும்பாலானோர் பணிக்குச் செல்லும் அவசரத்தில் கூட்டத்தில் நெரிசலில் செல்கின்றனர். அதில் வேண்டுமென்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களும் உண்டு என்று கமல்ஹாசன் கூறும்பொழுது தனது கையை உயர்த்தி காட்டினார் சரவணன்

saravanan

சரவணனின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தன்னைப் போல யாரும் தவறு செய்யக்கூடாது எனவும், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும்  சரவணன் நேற்று தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில்  சரவணன் இந்த நிகழ்ச்சியில் இருக்க தகுதியே இல்லாதவர். அவரை வீட்டை விட்டு உடனே வெளியேற்றுங்கள் என கோபமாக பதிவு செய்துள்ளார்.