
Vanitha surya devi issue latest news
நடிகை வனிதா விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட சூர்யா தேவி மற்றும் அவரை கைது செய்யத காவல் ஆய்வாளர் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்தும் வனிதாவை பற்றி அவதூறு பரப்புவதும், மிரட்டல் விடுப்பதாகவும் இருந்த சூர்யா தேவி என்ற பெண்ணை வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். சூர்யா தேவியை கைது செய்ததை அடுத்து விதிமுறை அடிப்படையில் கொரோனா பரிசோதனைக்காக ஆய்வாளர் ஜோதி அழைத்துச் சென்றுள்ளார். சூர்யா தேவிக்கு பரிசோதனை செய்யப்பட்டது மட்டுமல்லாமல், தனக்கும் ஆய்வாளர் சோதனை செய்து கொண்டுள்ளார்.
இந்த பரிசோதனையில் சூர்யா தேவி மற்றும் காவல் ஆய்வாளர் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து சூர்யா தேவி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா தேவியை கைது செய்தபோது அவருடன் நடிகை வனிதா மற்றும் வேறுசில காவலர்கள் உடன் இருந்ததாகவும், தற்போது அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement