சினிமா

அம்மாவிடம் போகமாட்டேன் என கதறி அழுத வனிதாவின் மகனா இது! இப்படி வளர்ந்துட்டாரே! முதன்முதலாக வெளியான புகைப்படம்!

Summary:

vanitha son photo viral

பிரபல  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் பிரபல முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகள் ஆவார். நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் எப்பொழுதும் கோபப்பட்டு கொண்டும்,  பிரச்சினைகளை உருவாக்கி கொண்டும் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனாலும் அவரது தாய் பாசத்தின் மூலம் மக்களிடையே நல்ல பெயரையும் பெற்றார். 

நடிகை வனிதா 2000அம் ஆண்டு பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

 அதனை தொடர்ந்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜெயனிதா என்ற மகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்தனர். மேலும் தற்போது தனது குடும்பத்தினரிடமும் பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக  வசித்து வருகிறார். ஆனால் அவரது மகன் விஜய் ஸ்ரீஹரி அவரது தந்தையுடன் மற்றும் விஜயகுமார் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். 

 இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வனிதா விஜய் ஸ்ரீஹரியை தன்னுடன் வருமாறு விமானநிலையத்தில் கட்டாயப்படுத்தி அழைத்தார். ஆனால் அவர் வர முடியாது என ககதறி அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனாலும் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தனது மகன் தன்னுடன் வர வேண்டுமென்பது குறித்து அடிக்கடி பேசி வந்தார். இந்நிலையில் இது இதுவரை விஜய் ஸ்ரீஹரியின் புகைப்படம் வெளிவராத நிலையில் தற்பொழுது வனிதா முதன்முதலாக  வெளியிட்டுள்ளார்.


Advertisement