என்ன இப்படி சொல்லிட்டாரே! கமல் விலகியதற்கு காரணமே வேற.. வனிதா போட்டுடைத்த பகீர் தகவல்!!vanitha-said-about-kamal-releaving-from-bigboss-ultimat

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துகொண்ட 14 பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வந்தார். இந்தநிலையில் சூட்டிங் இருப்பதாலும், சில தவிர்க்க முடியாத காரணத்தாலும் அவர் அண்மையில் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தற்போது சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் கமல் வெளியேறிய சில நாட்களிலேயே வனிதாவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

vanitha

அதனைத் தொடர்ந்து வனிதா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கமல் வெளியேறியதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். அதில் விக்ரம் படத்தோட தயாரிப்பாளரே கமல்ஹாசன்தான். அவரால் ஷூட்டிங்கிற்கு நேரம் ஒதுக்க முடியாதா?  4 நாட்கள் மட்டுமே அவருக்கு ஷூட்டிங் இருக்கும். அப்படியிருக்கும்போது அவர் ஏன் விலக வேண்டும்? அவருக்கே இந்த நிகழ்ச்சி தவறாக செல்கிறது என்று தெரிகிறது. நாங்ளே பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த நிகழ்ச்சியை தவறாக கொண்டு செல்கிறார்கள் என பேசி கொண்டோம். மேலும் நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன்.  இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் சரியில்லை. அதனால் தான் வெளியே வந்துவிட்டேன் என குற்றம்சாட்டியுள்ளார்.