சினிமா

ப்ளீஸ் இதை மட்டும் செய்யுங்க! ரஜினி, கமல், விஜய், சூர்யாவிற்கு நடிகை வனிதா விடுத்த திடீர் வேண்டுகோள்! என்ன தெரியுமா?

Summary:

Vanitha request tweet to famous actress

நடிகை வனிதா ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அவரது இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பேசும் பொருளானது. இதனால் எழுந்த சர்ச்சைகளுக்கு நடிகை வனிதா அசராமல் பதில் அளித்து வந்தார். மேலும் இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது எழும் எதிர்மறையான விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் ரசிகர் பாலா என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து நடிகை வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு  வெளியிட்டுள்ளார்.

அதில், சமூக ஊடகங்கள் தற்போது எதிர்மறையான விஷயங்களால் நிரம்பியுள்ளது. உணர்வுபூர்வமாக கஷ்டப்படும் மற்றவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், கனிவாக பேசாமல் இருப்பதை கண்ணியமான சமூகம் என்று அழைக்காதீர். மகிழ்ச்சியில்லாத ஹேஷ்டாக்குகள் மட்டுமே உள்ளது. நடிகர்கள் அனைவரும் தயவுசெய்து உங்களது ட்விட்டர் பக்கங்களில் இருந்து பாசிட்டிவான கருத்துக்களை பரப்புங்கள். உற்சாகமளிக்கும் செய்திகளைப் பகிருங்கள்  என தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், எனது தாழ்மையான வேண்டுகோள் உங்களை பார்த்து வளரும் உங்களது ரசிகர்களுக்காக நீங்கள் அவ்வப்போது உற்சாகமாக பேசினால் இந்த கடுமையான காலகட்டத்தில் அவர்களுக்கு அது புதிய உத்வேகத்தை கொடுக்கும். இந்த விளம்பரங்கள் தாமதிக்கலாம். மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர்களுக்கு நீங்கள் தேவை என தெரிவித்துள்ளார்.  மேலும் அதனை ரஜினி,  கமல்,  விஜய், சூர்யா டுவிட்டருக்கு  டேக் செய்துள்ளார். 


Advertisement