சினிமா

குடும்பத்தில் ஒருத்தர் இறந்திருக்கும்போது கூட எப்படி இதெல்லாம் முடியுது! தங்கைகளை வறுத்தெடுத்த வனிதா! ஏன் தெரியுமா?

Summary:

குடும்பத்தில் ஒருத்தர் இறந்திருக்கும்போது கூட எப்படி இதெல்லாம் முடியுது! தங்கைகளை வறுத்தெடுத்த வனிதா! ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய பிரபலமாக இருந்து வருபவர் நடிகை வனிதா. அவர் சினிமா துறையில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கிய விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளாவார். வனிதாவின் சகோதரிகள் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. இந்த நிலையில் வனிதாவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குடும்பத்தினர்கள் அவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.

மேலும் வனிதாவும் 3 திருமணம் செய்த நிலையில் கணவரை பிரிந்து தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையிலேயே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. 

இந்த நிலையில் விஜயகுமாரின் சகோதரரின் மகளான இந்திராவின் கடைசி மகளான அனிதா என்ற 20 வயது பெண் சமீபத்தில் கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வனிதா மிக உருக்கமாக, அனிதா எனக்கு மிகவும் ஆதரவாக இருந்து வந்தார். தன்னுடன் வந்து தங்க திட்டமிட்டிருந்தார். அவர் இறந்து 16 நாட்கள் கழித்துதான் எனக்கு அந்த செய்தியே தெரியும். இதனால் நான் எனது நவராத்திரியை கூட கொண்டாடவில்லை.

என் சகோதர, சகோதரிகள் போல பட்டுப் புடவைகள், நகைகள் அணிந்துகொண்டு பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்வது, நவராத்திரி கொண்டாடுவது என்னால் முடியவில்லை. எப்படித்தான் குடும்பத்தில் இவ்வாறு ஒரு குழந்தை இறந்தநிலையில் இப்படியெல்லாம் செய்ய முடிகிறதோ. மனிதாபிமானமற்ற செயல். என் வாழ்க்கையில் அந்த போலியான குடும்பம் இல்லை என்று நினைக்கும் போது கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 


Advertisement