சினிமா

அட.. என்னம்மா லுக்கு இது.. ஸ்கூல் பொண்ணுனு நினைப்பா! வைரலாகும் வனிதாவின் அசத்தல் புகைப்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுக

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. இப்படத்தை தொடர்ந்து வனிதா சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் பிரபல நடிகரும், தனது தந்தையுமான நடிகர் விஜயகுமாருடன் குடும்ப பிரச்னையில் சிக்கி பல சர்ச்சைகளை கிளப்பி பிரபலமானார்.

 பின்னர் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் தனது மூன்றாவது திருமணத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் அடுத்ததாக முன்னேறி வருகிறார். யூடியூப் சேனலில் சமையல் வீடியோக்கள், அழகு குறிப்புகள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார்.

மேலும் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் தற்போது குவிந்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது ரோஸ்மில்க் நிற உடையில் ஸ்கூல் பொண்ணு மாதிரி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் வைரலான நிலையில் பலரும் க்யூட் என புகழ்ந்து வருகின்றனர். மேலும் சிலர் என்னம்மா லுக்கு இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
 


Advertisement