சினிமா

நடிகை வனிதாவும், அருண் விஜய்யும் சொந்த அண்ணன் - தங்கையே கிடையாது.! இது தெரியுமா உங்களுக்கு?

Summary:

Vanitha is a half sister of actor arun vijay

தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் நாயகியாக நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

சினிமாவில் பெரிய அளவில் வெற்றிபெறாத இவர் ஒருசில படங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போனார். இந்நிலையில்தான் சொத்து தகராறு காரணமாக இவரது தந்தையுடன் சண்டையிட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு அதிலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானார்.

Image result for arun vijay sister vanitha

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து, விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற சமையல் தொடரில் நடித்து அதில் வெற்றியும் பெற்றார் நடிகை வனிதா. இந்நிலையில் வனிதா பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜயகுமாரின் மகள் என்பது நாம் அனைவர்க்கும் தெரியும், அதேபோல், இவர் நடிகர் அருண் விஜய்யின் சகோதரி என்பதும் தெரியும்.

ஆனால், வனிதா அருண் விஜய்யின் சொந்த சகோதரி கிடையாதாம். ஆம், நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கன்னு என்பவருக்கு விஜயகுமாருக்கும் பிறந்தவர்தான் அருண் விஜய். இவருக்கு கவிதா, அனிதா என இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கும் - விஜய்குமாருக்கும் பிறந்தவர்கள்தான் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி விஜயகுமார் சகோதரிகள். இவர்கள் அனைவரும் சொந்த அண்ணன் - தங்கைகள் என்றுதான் பெரும்பாலானோர் நினைத்திருந்த நிலையில், இந்த தகவல் தற்போது வைரலாகிவருகிறது.


Advertisement