சினிமா

ஜோதிடம் பலிச்சுருச்சோ.! மாலையும் கழுத்துமாக திருமணக் கோலத்தில் வனிதா! மாப்பிள்ளையை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அற

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வனிதா. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளார். இந்த நிலையில் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது செயல்களால் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு ஆளானார். 

அதனைத் தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியாளரானர். இந்த நிலையில் வனிதா பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். பின்னர் மூன்று மாதத்திலேயே அவரை விவாகரத்து பெற்று சமூக வலைத்தளத்தில் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாது வனிதா அடுத்தடுத்து படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருந்தார். 

இதற்கிடையில் அண்மையில் வனிதாவின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர் ஒருவர் முதல் எழுத்து எஸ் என ஆரம்பமாகும் நபருடன் விரைவில் நான்காவது திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வனிதா நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதனை கண்ட ரசிகர்கள் நான்காவது திருமணமா? என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இப்புகைப்படம் படத்திற்காக எடுக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.


Advertisement--!>