சினிமா

தாய்லாந்தில் கெத்து காட்டும் வனிதா! டாப் ஆங்கிளில் செம டக்கராக வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!!

Summary:

தாய்லாந்தில் கெத்து காட்டும் வனிதா! டாப் ஆங்கிளில் செம டக்கராக வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!!

தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா. அவர் பிரபல நட்சத்திரங்களான விஜயகுமார்- மஞ்சுளாவின் மூத்த மகள் ஆவார். சர்ச்சைக்கு பெயர் போன அவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது பேச்சாலும், செயலாலும் மக்களின் விமர்சனத்திற்கு ஆளாகி பெருமளவில் பிரபலமானார்.

இதனையடுத்து வனிதா விஜயகுமார் பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு பேச்சுப்பொருளானார். ஆனால் இருவரும் மூன்று மாதங்களிலேயே பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதனை தட்டி தூக்கிவிட்டு, வனிதா யூடியூப், சின்னத்திரை, வெள்ளித்திரை என  பிஸியாக இருந்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள வனிதா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.


Advertisement