கையில் மதுகோப்பை! வனிதாவின் தோள் மேல் கைபோட்டு மிக நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார்! விமர்சித்தவர்களுக்கு வனிதா பதிலடி!Vanitha explain about the photo with man

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை வனிதா கடந்த மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் இதற்கு மோசமாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தனது கணவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாகவும், நடிகை வனிதாவிற்கு எதிராகவும் சூர்யா தேவி, நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்ட பலரும் கருத்துகளை கூறி வந்தனர்.  மேலும் இதனால் டுவிட்டரில் பெரும்மோதலும் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென வனிதா நேற்று டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகி விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், நபர் ஒருவர் வனிதாவின் தோளில் கை போட்டுக்கொண்டு நெருக்கமாக அமர்ந்திருக்க, இருவரும் கண்ணாடி கோப்பையை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலானது. அதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் யார் அந்த நபர் என பல கேள்விகளை எழுப்பிவந்தனர். 

இந்த நிலையில் நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  அந்த நபர் தனது குடும்ப நண்பர். அவரது மனைவி, மகள் அனைவரும் எங்களது அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர் என பதிலளித்து திருமணத்தின் போது எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.