சினிமா

அட.. தன் மகளின் பிறந்தநாளில் வனிதா செய்த காரியத்தை பார்த்தீர்களா! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. சர்ச்சைகளுக்கு பெயர் போன அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் அவரது செயல்கள் மூலம் மோசமான விமர்சனங்கள் எழுந்தது. 

ஆனாலும் வனிதா அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியின் வெற்றியாளரானார். பின்னர் விஜய் தொலைக்காட்சியிலேயே சில நிகழ்ச்சிகளில் கலந்து வந்த அவர் 3-வது திருமணம் , விவாகரத்து என சமூகவலைதளங்களில் பேசுபொருளானார். மேலும் அதற்கெல்லாம் பதிலடி கொடுத்துக் கொண்டு அவர் தொடர்ந்து நிகழ்ச்சிகள், படங்கள் என பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் வனிதாவின் மூத்தமகள் ஜோவிகா தனது 16வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியுள்ளார். அப்பொழுது அவர் தனது வாயிலிருந்து அவரது வாய்க்கு கேக் ஊட்டிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் இதனைக் கண்ட பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றர். மேலும் சிலர் அவரையும் கெடுத்து விடாதீர்கள் வனிதா என கமெண்டு செய்துள்ளனர்.


Advertisement