சினிமா

பிரபல சீரியலில் செம கெத்தாக களமிறங்கிய நடிகை வனிதா! அதுவும் எந்த சேனலில் பார்த்தீர்களா!

Summary:

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமா

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து  வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் திருமதி ஹிட்லர். 

இந்த தொடரில் முன்னணி நடிகை அம்பிகா, மற்றும் விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்த அமித் பார்கவ் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர். இந்தநிலையில் இத்தொடரில் தற்போது முக்கிய கெஸ்ட் ரோலில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமான வனிதா களமிறங்கி அசத்தி வருகிறார். 

முன்னணி நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு நடுவராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் திகழ்ந்தார். மேலும் இதற்கு முன்பு அவர் சன் தொலைக்காட்சியில் சந்திரலேகா சீரியலில் முக்கிய கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த நிலையில் திருமதி ஹிட்லர் தொடரில் இவரது வரவு பெரும் திருப்பங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  


Advertisement