நேற்றுதான் மூன்றாவது திருமணம் இன்று அதுக்குள்ள பிரச்சனை ஆரம்பம்..! பீட்டர்பால் முதல் மனைவி போலீஸ் புகார்.! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

நேற்றுதான் மூன்றாவது திருமணம் இன்று அதுக்குள்ள பிரச்சனை ஆரம்பம்..! பீட்டர்பால் முதல் மனைவி போலீஸ் புகார்.!

பிக்பாஸ் புகழ் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் நேற்று அவரது வீட்டில் நடைபெற்ற நிலையில் அவரது மூன்றாவது கணவரின் முதல் மனைவியை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீட்டர் என்பவரை வனிதா நேற்று மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், பீட்டர் பாலுடன் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், தாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுவரை தனக்கு முறையான விவாகரத்து கொடுக்கவில்லை எனவும், தனக்கு விவாகரத்து கொடுத்த பிறகே வனிதாவை திருமணம் செய்துகொள்வதாக தன்னிடம் கூறியதாகவும், ஆனால் சொன்னபடி நடந்துகொள்ளாமல் நேற்று வனிதாவை திருமணம் செய்துகொண்டார்.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo