சினிமா

கணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா! வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!!

Summary:

கணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா! வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!!

கடந்த 2006ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்து ஹிட்டான திரைப்படம் வல்லவன். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ரீமா சென், சந்தியா, சந்தானம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்நிலையில் இப்படத்தில் காமெடி காட்சி ஒன்றில் நடித்த நடிகை ஒருவர் கணவரால் கைவிடப்பட்ட நிலையில் கார் ஓட்டி வாழ்க்கை நடத்தும் நிலைக்கு ஆளாகி உள்ளதாக காதல் பட நடிகர் சுகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர், வல்லவன் படத்தில் ஸ்கூல் நகைச்சுவை காட்சியில் சந்தானம் பேப்பர் ஒன்றை தூக்கி எறிய அதை எடுக்கும் மாணவி, "என்னா வெறும் பேப்பரை தூக்கி எறியுற, எதாச்சும் எழுதிக்குடு" என்று அதகளம் பண்ணியிருக்கும். சமீபத்தில் நான் கதை நாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் ஒரு காட்சியில் நடிக்க கொடைக்கானல் வந்திருந்தாள்.  எனக்கு அடையாளமே தெரியவில்லை.

இன்னும் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் அவளுக்கு ஏனோ சரியான வாய்ப்புகள் அமையாமல் காதல் கல்யாணம் பண்ணியவளுக்கு இரண்டு பிள்ளைகள்.. இப்போது கணவனால் கைவிடப்பட்டு, டாக்ஸி ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். எல்லா கார்களையும் ஓட்டுகிறாள் முடிந்தவரை வாய்ப்புகள் வந்தால் சொல்வதாக சொல்லியிருக்கிறேன். வாய்ப்புகள் அமையட்டும் லக்ஷ்மி'' என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் காதல் சுகுமாரின் இந்த பதிவு வைரலான நிலையில், வல்லவன் லட்சுமிக்கு 3 இயக்குனர்கள் வாய்ப்பு அளித்துள்ளதாகவும் மற்றொரு பதிவில் அவரே தெரிவித்துள்ளார்.


Advertisement