"ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்சன்" வெட்கப்பட வைக்குமளவு விளக்கம் கொடுத்த வைரமுத்துவின் ட்வீட்.! 

"ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்சன்" வெட்கப்பட வைக்குமளவு விளக்கம் கொடுத்த வைரமுத்துவின் ட்வீட்.! 


vairamuthu tweet about pothi vacha mallikai mottu song meaning

கடந்த 1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் மண்வாசனை. இந்த படம் அந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகியது. இதில் ஹீரோவாக பாண்டியன் மற்றும் ஹீரோயினாக ரேவதி ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் ராமநாதன், வினு சக்கரவர்த்தி, சூரியகாந்தி, சேனாதிபதி, காந்திமதி, விஜயன், அனிதா பாலன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்திருப்பார்கள். 

vairamuthu

இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்து இருப்பார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலுக்கான வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருப்பார். 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த படத்தின் பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 

இப்படத்தில் இடம்பெற்றுள்ள பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் வரும், "ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்ச வெட்க நிறம் போக, மஞ்சள் குளிச்சன்" என்ற வரிகளுக்கு அர்த்தம் தெரியவில்லை என்று கூறி சில நெட்டிசன்கள் அதை பேசு பொருளாக்கினர். இந்நிலையில் அதற்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

vairamuthu

அதில்," இன்றுடன்
நாற்பது ஆண்டுகள் 
பாரதிராஜாவின்
மண்வாசனை வெளிவந்து

“ஆத்துக்குள்ள நேத்து
ஒன்ன நெனச்சேன்
வெக்கநெறம் போக
மஞ்சக் குளிச்சேன்”என்ற வரியின்
பொருள் புரியாமல்
இன்னும் புகார் வருகிறது

"என் வெட்கத்தின்
சிவப்பு நிறம் பார்த்து
அது ஆசையின் 
அழைப்பென்று கருதி
என் முரட்டு மாமன் 
திருட்டுவேலை செய்துவிடக்கூடாது
அதனால் மஞ்சள் பூசி
என் வெட்கத்தை மறைக்கிறேன்"
என்பது விளக்கம்

இந்த நாற்பது ஆண்டுகளில்
காதலின் விழுமியம் மாறியிருக்கிறது
வெட்கப்பட ஆளுமில்லை
மஞ்சளுக்கும் வேலையில்லை" என்று தெரிவித்துள்ளார்