சினிமா

அட.. நம்ம தலைவன் வடிவேலுவா இது! நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான புகைப்படம்! எப்படியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாப

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தனக்கென யாராலும் நிரப்பபமுடியாத ஒரு தக்க  இடத்தை வைத்திருப்பவர் நடிகர் வடிவேலு. அவரது உடல் பாவனைகளும்,காமெடியான டயலாக்கும் தமிழ் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டது.  நடிகர் வடிவேலுவை தொடர்ந்து தற்போது சந்தானம், சூரி, சதீஷ், யோகிபாபு என ஏராளமான காமெடி நடிகர்கள் வந்தாலும் நடிகர் வடிவேலுவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. மேலும் தற்போது வரை அவருக்கு என ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். பின்னர் ஒரு சில காரணங்களால், பிரச்சினைகளால் நடிகர் வடிவேலு தமிழ் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் தற்போதும் ரசிகர்களால் பேசப்படுகிறார். 

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மனோபாலா, வடிவேலு, சந்தானம் பாரதி, கங்கை அமரன் ஆகியோர் சந்தித்துள்ளனர். இத்தகைய புகைப்படத்தை மனோபாலா இணையத்தில் வெளியிட்ட நிலையில் அதனை கண்ட ரசிகர்கள்  உற்சாகமடைந்துள்ளனர்.
 


Advertisement