கடைசி நாள்.. முடிவுக்கு வந்த பிரபல சீரியல்! நன்றி கூறி சுஜிதா வெளியிட்ட புகைப்படம்!!

கடைசி நாள்.. முடிவுக்கு வந்த பிரபல சீரியல்! நன்றி கூறி சுஜிதா வெளியிட்ட புகைப்படம்!!


vadinamma-serial-end-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன், ஒவ்வொரு நாளும் அதிரடி திருப்பங்களுடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அண்ணன் தம்பிகளின் பாசம்,  கூட்டுக்குடும்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 
இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, காவ்யா, குமரன், சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்களிடையே பெருமளவில் பிரபலமான இந்த தொடர் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

தெலுங்கில் அந்த தொடர் Vadinamma என்ற பெயரில் ஒளிப்பரப்பாகி வந்தது. இந்த சீரியலிலும் நடிகை சுஜிதாவே முக்கிய முன்னணி ரோலில் நடித்தார். தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளதாம். இந்நிலையில் இதனை நடிகை சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சீரியலில் நடித்த அனைவரும் நன்றி கூறி எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.