சினிமா

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வட சென்னை திரைப்படம்! படம் எப்படி?

Summary:

Vada chennai tamil movie review and updates

வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வரவுள்ள திரைப்படம் வட சென்னை. தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‎ஒன்டர்பர் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கிறது.

இவர்கள் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது வட சென்னை திரைப்படம்.

வட சென்னை மூன்று பாகங்களாக தயாராகி வருவதாகா தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் வட சென்னை படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகுகிறது.
தனுஷ் திரைப்படத்திலேயே இந்த படத்திற்கு மிகப்பெரும் ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஏற்கனவே வட சென்னை படத்தின் டீஸர் ப்ரொமொ வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படம் எப்படி உள்ளது என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.


Advertisement