வாடிவாசல் எப்போ தொடங்குது? சூர்யா ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தி!!

வாடிவாசல் எப்போ தொடங்குது? சூர்யா ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தி!!



vaadivasal-latest-update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா சூரரை போற்று திரைப்படத்தைத் தொடர்ந்து தனது 40ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும் முழுவீச்சில் நடைபெறும் இதன் படப்பிடிப்பு மூன்று மாதங்களில் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து சூர்யா கைவசம் தற்போது அருவா  மற்றும் வாடிவாசல் என இருபடங்கள் உள்ளன.

vaadivasal

 இந்த நிலையில் சூர்யா தனது 40வது திரைப்படத்திற்கு பிறகு வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்