சினிமா

தமன்னாவின் காதலை அனைவர்முன்பும் போட்டு உடைத்த உதயநிதி ஸ்டாலின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

Udayanithi stalin talks about tamanna love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. வியாபாரி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார். இவர் நடித்த கல்லூரி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

அதன்பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த முக்கால்வாசி படங்களில் தமன்னாதான் கதாநாயகி. சன் பிக்சர்ஸ் தயாரித்த படிக்காதவன் திரைப்படம் மூலம் முன்னணி நாயகிளில் ஒருவராக மாறினார் தமன்னா.

விஜய், சூர்யா, அஜித் என தமிழ் சினிமா பிரபலங்கள் பலருடன் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லது, தெலுங்கு, மலையாளம், கனடா, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார் தமன்னா.

தற்போதும் தமிழில் தமன்னா கைவசம் ஒரு படம் மட்டுமே உள்ளது. உதயநிதி நடிப்பில் கண்ணே கலைமானே படத்தில் மட்டுமே அவர் நடித்துவந்தார்.

கண்ணே கலைமானே படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது ஒருவர் தமன்னாவிடம் ப்ரொபோஸ் செய்ய, அதற்கு பதில் கொடுத்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் “தமன்னாவிற்கு அமெரிக்காவில் காதலர் இருக்கார்னு தெரியுமா” என கேட்டுள்ளார்.

இதன் மூலம் தமன்னாவின் காதலை மேடையில் அனைவர் முன்பும் போட்டு உடைத்துவிட்டார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.


Advertisement