சினிமா

கார்விபத்தில் உயிரிழந்த பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

Summary:

two serial actress dead in one car accident

தெலுங்கு தொலைகாட்சியில் பல சீரியல்களில் நடித்து முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி. இவர்கள் இருவரும் அனந்தகிரி வனப்பகுதியில் நடந்த பட பிடிப்பை முடித்துவிட்டு ஒன்றாக காரில் ஹைதராபாத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தனர்.  

அப்போது விகாராபாத் என்ற பகுதியின் அருகே கார் வந்துகொண்டிருந்த அவர்களுக்கு எதிரே லாரி ஒன்று வந்துகொண்டுள்ளது. அந்நிலையில்  அவர்களுக்கு வழிவிடுவததற்காக ஓட்டுநர் காரை வேகமாக திரும்பியுள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நடிகை அனுஷா ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நடிகை பார்கவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

நடிகை அனுஷா ரெட்டி, தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல்களில்  நடித்துள்ளார்.மேலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில், கதாநாயகனாக வரும் கார்த்திக்கின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.மேலும்  மற்றொரு நெடுந்தொடரில் நாயகியாக நடித்து வந்தார். 

பார்கவி தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் 'முத்யால முக்கு' என்கிற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். ஒரே கார் விபத்தில் இரு இளம் நடிகைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


Advertisement