கீர்த்தி சுரேஷ், விஜய் முதலிடம்! ஆனா நயன்தாரா.. வெளிவந்த டாப் லிஸ்ட்! எதில் பார்த்தீங்களா!!

கீர்த்தி சுரேஷ், விஜய் முதலிடம்! ஆனா நயன்தாரா.. வெளிவந்த டாப் லிஸ்ட்! எதில் பார்த்தீங்களா!!


twitter-india-release-top-list-about-most-tweeted-fame

2021 ஆம் ஆண்டு டிவிட்டரில் அதிகளவில் கருத்துக்கள் பகிரப்பட்ட தென்னிந்திய நடிகைகள் குறித்த பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி பின்னர் ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து 2வது இடத்தை பூஜா ஹெக்டேவும், சமந்தா 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும், காஜல் அகர்வால் 4வது இடத்தையும், மாளவிகா மோகனன் 5வது இடத்தையும், ராகுல் ப்ரீத்சிங் 6வது இடத்தையும், சாய் பல்லவி 7வது இடத்தையும், தமன்னா 8வது பிடித்துள்ளனர். அனுஷ்கா 9வது இடத்தையும், அனுபமா 10வது இடத்தையும் பிடித்துள்ளனர். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா எந்த இடத்தையும் பிடிக்கவில்லை.

அவர்களைப் போல நடிகர்களில் முதலிடத்தை விஜய், இரண்டாவது இடத்தை பவன் கல்யாண், மூன்றாவது இடத்தை மகேஷ் பாபு ஆகியோர் பிடித்துள்ளனர். மேலும் 3சூர்யா 4வது இடத்தையும், ஜூனியர் என்.டி.ஆர். 5வது இடத்தையும், அல்லி அர்ஜூன் 6வது இடத்தையும், ரஜினி 7வது இடத்தையும், ராம் சரண் 8வது இடத்தையும் பிடித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து 9வது இடத்தை தனுஷ், 10வது இடத்தை அஜித் ஆகியோர் பிடித்துள்ளனர்.