"இந்த காரணத்தினால் தான் பாலிவுட்டில் நடிக்க விருப்பமில்லை" நடிகை த்ரிஷாவின் மனம் திறந்த பேட்டி.!?Trisha openup about her Bollywood movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் த்ரிஷா. மாடல் அழகியாகவும், விளம்பர படங்களிலும் தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த த்ரிஷா, கதாநாயகியாக தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையில் கலக்கி வரும் திரிஷாவின் நடிப்பு திறமைக்காக தற்போதும் ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றன.

trisha

தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் அளித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டியிருக்கிறார் திரிஷா.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக தனது அட்டகாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். இப்படத்தில் திரிஷாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்தது. இதனை அடுத்து ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து கமிட்டாகி பிஸியான நடிகையாக இருந்து வரும் த்ரிஷா, மீண்டும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட போவதாக கூறப்பட்டு வருகிறது.

trisha

இதனையடுத்து சமீபத்தில் யூ ட்யூப் சேனலில் பேட்டி அளித்த திரிஷா பாலிவுட்டில் ஏன் நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். அதாவது, த்ரிஷா முதல் படம் தோல்வி அடைந்ததால் தான் அவர் அதன் பிறகு பாலிவுட்டில் எந்த படங்களில் நடிக்கவில்லை என்று கருத்து நிலவி வருகிறது. இதற்கு பதில் அளித்த திரிஷா, "அதில் உண்மை இல்லை, பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்றால் மும்பையில் செட்டில் ஆக வேண்டும். ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை என்பதால் தான் தமிழில் தொடர்ந்து நடித்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.