சினிமா

நடிகை திரிஷாவின் அப்பாவை பார்த்திருக்கீங்களா? திரிஷாவே வெளியிட்ட புகைப்படம்!

Summary:

Trisha dad instagram photo

திரிஷாவே அவரது அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் வசீகர நாயகி த்ரிஷா, கடந்த 15 வருடங்களாக முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், விஜய், விக்ரம், விஜய் சேதுபதி, சூர்யா, ஜெயம் ரவி போன்ற பல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர்.


இந்நிலையில் திரிஷா நடிப்பில் கடைசியாக வந்த 96 படம் அவருக்கு பெரிய திருப்பத்தை எற்படுத்தி கொடுத்தது. 96 திரைப்படம் மூலம் மீண்டும் அணைத்து இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை திரிஷா. இந்த திரைப்படத்திற்கு பின்பு, தான் நடிக்கும் படங்களின் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் திரிஷா.

நடிகை திரிஷாவை அடிக்கடி அவரின் அம்மாவுடன் அதிகமாக பார்த்திருப்போம், அவருடைய அப்பாவை பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. திரிஷாவே அவரது அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement