பார்ப்போரை நடுங்கவைக்கும் சிசிடிவி காட்சி.! காவலாளியின் தலையில் கல்லை போட்ட சைக்கோ திருடன்.!

பார்ப்போரை நடுங்கவைக்கும் சிசிடிவி காட்சி.! காவலாளியின் தலையில் கல்லை போட்ட சைக்கோ திருடன்.!


Trichy security guard attacked accused arrested

திருச்சி காவலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வேலை பார்த்துவந்த காவலாளியின் தலையில் இளைஞர் ஒருவர் பெரிய கல்லை தூக்கி போட்டு, அவரிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அந்த காவலாளியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். வீடியோவில் பதிவாகியிருந்த நபரின் அடையாளத்தை வைத்து போலீசார் கொலையாளியை தேடிவந்தனர்.

இந்நிலையில், கொலை செய்த்தவரின் பெயர் ராஜ்குமார்(25) என்பதும் அவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து, கறம்பக்குடி சென்ற போலீசார் தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சேலம், கரூரில் நடைபெற்ற 5 கொலைகளில்  அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் அந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.