2018: தமிழ் சினிமாவில் அதிக வசூல் படைத்த டாப் 10 திரைப்படங்கள் எவை?

2018: தமிழ் சினிமாவில் அதிக வசூல் படைத்த டாப் 10 திரைப்படங்கள் எவை?


top-10-movies-of-2018-in-tamilnadu

2018ம் ஆண்டு கடைசி பத்து நாட்களில் அடி எடுத்து வைத்து விட்டோம். இந்த ஆண்டில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த டாப் 10 திரைப்படங்களை பற்றிய ஒரு அலசல் தான் இது.

பல வருடங்களுக்கு பிறகு ஒரே ஆண்டில் இரண்டு படங்களை கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது படங்களான காலா மற்றும் 2.0 தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத வரவேற்பை பெற்றது. இருப்பினும் தமிழ்நாட்டில் வசூலில் இந்த இரண்டு படங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடம் பிடித்து விட்டது இளையதளபதி விஜய்யின் சர்க்கார் திரைப்படம்.

tamil cinema

இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள விஜயின் சர்க்கார் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 126 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் 2.0 அதே 126 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தாலும், 3D கட்டணத்தை நீக்கினால் வெறும் 111 கோடி தான் வருகிறது. எனவே 2.0 இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து ரஜினியின் மற்றொரு படமான காலா 59 கோடியுடன் மூன்றாம் இடத்திலும், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் 52 கோடியுடன் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்த இடங்களில் சிவகார்த்திகேயனின் சீமா ராஜா, செக்கச் சிவந்த வானம், தானா சேர்ந்த கூட்டம், வடசென்னை, அவெஞ்சர்ஸ், இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

1. சர்க்கார் - 126 கோடி
2. 2.0 - 111 கோடி
3. காலா - 59 கோடி
4. கடைக்குட்டி சிங்கம் - 52 கோடி
5. சீமா ராஜா - 49 கோடி
6. செக்கச் சிவந்த வானம் - 46 கோடி
7. தானா சேர்ந்த கூட்டம் - 44 கோடி
8. வடசென்னை - 39 கோடி
9. அவெஞ்சர்ஸ் - 32 கோடி
10. இமைக்கா நொடிகள் - 29 கோடி