சினிமா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சர்கார் ஹீரோயின் குவியும் வாழ்த்துக்கள் !!

Summary:

today-keerthi-suresh-birthday-fans-are-wishing-to-her-sarkar

நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது 26வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
கீர்த்தி சுரேஷ், 1992 அக்டோபர் 17ல் பிறந்தார். இவர் சென்னையில் பிறந்தவர். இவரது அம்மா நடிகை மோகனா, அப்பா சுரேஷ். இவரது அம்மா மோகனா பிரபல நடிகை. கீர்த்தி சுரேஷ் பள்ளிப்படிப்பை கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் முடித்தார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், 2000களில் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ படங்கள் நல்ல ஓபனிங் இருந்ததனால் கீர்த்தியின் நடிப்பும் வெளிச்சத்திற்கு வந்தது எனச் சொல்லலாம். சிவகார்த்திகேயனின் குறும்புத்தனத்திற்கு ஈடுகொடுக்கும் நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து விஜய்யுடன் ‘பைரவா’, தனுஷ்சுடன் ‘தொடரி’, சூர்யா உடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஷாலுடன் ‘சண்டை கோழி 2’, விக்ரமுடன் ‘சாமி 2’, மீண்டும் விஜய்யுடன் ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை பேசிய நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றது கீர்த்தியின் திரைவாழ்க்கையில் அவர் அடைந்த மிகப்பெரிய கீர்த்தி. சாவித்ரியாகவே என் கண்ணுக்கு தெரிந்தார் கீர்த்தி சுரேஷ் என பலரும் பாராட்டினர்.

தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், சூர்யா, விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து கீர்த்தியின் திரைவாழ்க்கை டாப் கியரில் போய்கொண்டிருக்கிறது. இது என்ன மாயம் படத்தில் ஒரு ஸ்டேஜில் பாட்டு பாடுவதுபோல் அறிமுகமானார், தொடரியில் "வல்லிய சிங்கராயிட்டு வரனும்" என முயற்சித்த கீர்த்தி சாமி 2 படத்தில் பாட்டு பாடி பாடகியாகவும் ஆகிவிட்டார்.

 


Advertisement