மீண்டும் வருகிறது டிவி சீரியல்கள்..! சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

மீண்டும் வருகிறது டிவி சீரியல்கள்..! சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து இன்னும் சில நாட்களில் மீண்டும் சீரியல்கள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டது. குறிப்பாக சினிமா படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் பழைய தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கியது. இந்நிலையில் நான்காம்கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சினிமா படப்பிடிப்புகளும் தளர்வுகள் வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனை அடுத்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கவேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து ஏற்கனவே தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனால் விரைவில் சீரியல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுல நடிகர் மனோபாலா, எங்கள் கோரிக்கையை ஏற்று சின்னத்திரை படபிடிப்புக்கு அனுமதி அளித்த மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் மற்றும் செய்தி துறை அமைச்சர் அவர்களுக்கும் சின்னத்திரை சங்கங்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்...!! என தெரிவித்துள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo