அட.! "மிஸ் பண்ணிட்டீங்களே சார்.."! ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகன் வாய்ப்பை மிஸ் செய்த இளம் நடிகர்.!

அட.! "மிஸ் பண்ணிட்டீங்களே சார்.."! ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகன் வாய்ப்பை மிஸ் செய்த இளம் நடிகர்.!



this-upcoming-star-miss-the-oppourtunity-in-blue-star-m

நீலம் ப்ரொடக்சன் சார்பாக சாந்தனு மற்றும் அசோக்செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தி வெளியாகி இருக்கிறது.

இரு ஊர்களுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் இந்த கதையை படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் சாந்தனுவுக்கும் ப்ரித்விக்கும் ஒரு நல்ல எதிர்காலமே அமைந்து விட்டது. இரண்டு பேருக்கும் தமிழில் வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. இருவருமே ஒரு நல்ல வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் அவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். இந்த நிலையில் அசோக் செல்வன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் கவினாம். தமிழில் இவர் நடித்த டாடா திரைப்படம் மெஹாஹிட் ஆகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

tamil cinemaஇயக்குனர் இந்த கதையை முதலில் கவினிடம் சொல்ல கவினுக்கு மிகவும் பிடித்துப் போயிருந்ததாம். ஆனால் அவருக்கு கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஏகப்பட்ட படங்களில் பிஸியாக இருந்ததனால் இந்த வாய்ப்பு அசோக் செல்வனுக்கு சென்றிருக்கிறது. இந்த படம் இப்போது நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

tamil cinemaஏற்கனவே கவினும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த ஹிட் லிஸ்ட்டில் ப்ளூ ஸ்டார் திரைப்படமும் வந்திருக்க வேண்டியது. ஆனால் மிஸ் ஆகிவிட்டது. இப்போது கவின் கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கிறார். அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் கவின். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம்.