சினிமா

பெற்றோரை எதிர்த்து, திடீர் திருமணம் செய்து கொண்ட தேன்மொழி சீரியல் நடிகை! மாப்பிளை இவர்தானா? ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

thenmozhi serial actress anjali talk about her marriage

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அஞ்சலி. அதனை தொடர்ந்து அவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த தொடரில் பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நாயகியாக நடித்துவருகிறார். அவருக்கு தங்கையாக அஞ்சலி நடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக அவருக்கு பதில் வேறு ஒருவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, நான் பிகாம் முடித்துவிட்டு சிஏ படித்து கொண்டிருந்தேன். அப்பொழுது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சின்னத்திரை பக்கம் வந்தேன். சன்லைட் மசாலா காஃபி என்ற நிகழ்ச்சியில் முதன்முதலாக காமெடி கான்செப்ட் செய்தேன். அப்பொழுதுதான் பிரபாகரன் எனக்கு பழக்கமானார் . அதனை தொடர்ந்து இருவரும் சேர்ந்து கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.

பின்னர் நண்பர்களாக இருந்த  நாங்கள் காதலிக்க துவங்கினோம். எங்களது காதல் எனது வீட்டிற்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பிரபாகரன் பெற்றோர்களின் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

 அதனைத் தொடர்ந்து தேன்மொழி சீரியலில் நடிக்க வந்தேன். அதில் ஸ்கூல் யூனிபார்மில் மிகவும் சிறிய பெண்ணை போல இருப்பேன். இந்நிலையில் இந்த தொடரில் தற்பொழுது தேன்மொழி தங்கையின் கதாபாத்திரத்தில் லவ் ட்ராக் போய்க்கொண்டுள்ளது அந்த கதாபாத்திரத்திற்கு எனது முகம் சரியாக இருக்காது என்பதால் வேறு நடிகையை தேர்வு செய்துள்ளனர். நான் தற்போது படத்தில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.


Advertisement