அம்மாடியோவ்.. மாஸ் காட்டும் தலைவர் தனுஷ்! அவர் அணிந்திருக்கும் உடையின் விலையை கேட்டா ஆடிபோயிருவீங்க!!thanush-wearing-dress-price-viral

தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து இந்தியளவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். அவர் தற்போது ஹாலிவுட் சினிமாவில் காலடி பதித்து தி கிரே மேன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.

மேலும் இதில் ரியான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர். தி கிரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 22-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்காக உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

thanush

விரைவில் இந்தியாவிலும் தி கிரே மேன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மும்பையில் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவில் வைரலானது. அதில் தனுஷ் காஷூவலான நீல நிற பர்பெர்ரி ஹூடி, வெள்ளை ஜாகர் அணிந்து ஸ்டைலாக இருந்தார்.

அதனை தொடர்ந்து ரசிகர்கள் தனுஷ் அணிந்திருந்த உடை குறித்த தேடலை தொடங்கினர். தனுஷ் அணிந்திருந்த அந்த ஹூடியின் விலை சுமார் ரூ.67,000 இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அந்த உடை தனுஷிற்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.