
நடிகை மும்தாஜ் வீட்டில் கொடுமை தாங்கமுடியல.! போலீசாருக்கு வந்த போன்கால்! நடந்த ஷாக் சம்பவம்!!
தமிழ் சினிமாவில் தற்போது நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டு விளங்கி வருபவர் தனுஷ். திரைத்துறையில் இவர் 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனுஷ் இதுவரை 46 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் 4 முறை தேசிய விருது மற்றும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். தனுஷ் தற்போது தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இந்த நிலையில் நேற்றுடன் அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து அவர் மிகவும் நெகிழ்ச்சியாக தனது டுவிட்டர் பக்கத்தில், நான் திரையுலக பயணத்தை துவங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. காலம் ஓடிவிட்டது. நான் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தபோது இவ்வளவு தூரம் வருவேன் என கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. எனது ரசிகர்களின் அளவற்ற அன்பும் ஆதரவும் இல்லையென்றால் என்னால் இதை நினைத்து கூட பார்த்திருக்க முடியாது. நீங்கள் தான் எனது பலத்தின் தூண்கள்.
மீடியா, டிவி சேனல்கள் மற்றும் சோஷியல் மீடியா ஆதரவாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. என்னுடன் பணியாற்றிய இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்ப கலைஞர்கள், என்னுடன் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய சகோதரர் மற்றும் குரு செல்வராகவனுக்கு நன்றி. எனக்குள் இருந்த நடிகனை அடையாளம் காட்டிய எனது அப்பா கஸ்தூரி ராஜாவிற்கு என்னுடைய நன்றி. எனது அம்மாவிற்கு நன்றி. தினமும் அவர் செய்யும் பிரார்த்தனைதான் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement