சினிமா

செம ஹேப்பியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகர் தனுஷ்! அதுவும் யாருடன் பாத்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படங்கள்!

Summary:

நடிகர் தனுஷ் தனது அத்ரங்கி ரே பாலிவுட் படக்குழுவுடன் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு  துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தனுஷ். இப்படத்தின் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து  அடுத்தடுத்ததாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார். மேலும் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் நடிகர் தனுஷ்  தமிழ் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என பல மொழி படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

மேலும் நடிகர் தனுஷ் கைவசம் தற்போது  கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் என செம பிசியாக உள்ளார். மேலும் Captain America, Avengers End Game இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகவுள்ள தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி பாலிவுட்டில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘அத்ரங்கி ரே’ படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஹீரோயினாக சாரா அலிகான் நடிக்கிறார். மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமாரும் நடிக்கிறார். இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் நடிகர் தனுஷும் தனது அத்ரங்கி ரே பாலிவுட் படக்குழுவுடன் இணைந்து கிறித்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement