என் மீது காட்டிய அக்கரைக்கு நன்றி; அறுவை சிகிச்சை முடிந்தது... உங்களிடம் விரைவில் பேசுவேன்... ட்விட்டரில் விஜய் ஆண்டனி...!

என் மீது காட்டிய அக்கரைக்கு நன்றி; அறுவை சிகிச்சை முடிந்தது... உங்களிடம் விரைவில் பேசுவேன்... ட்விட்டரில் விஜய் ஆண்டனி...!


Thank you for showing kindness to me; Surgery completed...   Will talk to you soon... Vijay Antony on Twitter...

நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சை முடிந்தது விரைவில் பேசுவேன் என கூறியுள்ளார்.  

2016-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான "பிச்சைக்காரன்" திரைப்படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் மலேசியாவில் "பிச்சைக்காரன்-2" படப்பிடிப்பு  நடந்தபோது பயங்கர விபத்து ஏற்பட்டது. 

விஜய் ஆண்டனி கடலில் படகில் வேகமாக சென்றபோது அது இன்னொரு படகில் மோதியதில் விஜய் ஆண்டனி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. படக்குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் சென்னை அழைத்து வரப்பட்டார். 

இந்நிலையில் விஜய் ஆண்டனி டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு வெளியிட்டுள்ளார், ''அன்பு நண்பர்களே, மலேசியாவில் "பிச்சைக்காரன் 2" படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் எனக்கு தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து பத்திரமாக மீண்டு வந்துள்ளேன். பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். அனைவரது ஆதரவுக்கும், எனது உடல்நிலையில் காட்டிய அக்கறைக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.