விஜய்யின் அடுத்த படத்தில் இதுதான் அவரது பெயராம்! வெளியே கசிந்த செய்தி!

Thalapathi 63 vijay character name leaked


Thalapathi 63 vijay character name leaked

சர்க்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் அட்லீயுடன் கூட்டணி சேர்ந்து தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார் விஜய். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். மேலும், இந்த படம் விளையாட்டை மையமாக கொண்ட படம் என்றும், கால்பந்து அணிக்கு விஜய் பயிற்சியாளராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Thalapathi 63

இந்நிலையில் தளபதி 63 படத்தில் விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல் என்று செய்தி வைரலாகிவருகிறது. ஆனால், இது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகாத நிலையில் இந்த பெயரை சமூக வலைத்தளங்களில் வைராலக்கிவருகின்றனர் விஜய் ரசிகர்கள்.