'கைதி' படத்துடன் கனெக்டாகும் ரஜினியின் தலைவர் 171.. வெளியான அசத்தல் தகவல்!

'கைதி' படத்துடன் கனெக்டாகும் ரஜினியின் தலைவர் 171.. வெளியான அசத்தல் தகவல்!



thalaivar-171-movie-connect-kaithi-movie

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.‌ தற்போது இவர் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

lokesh kanagaraj

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், அந்த போஸ்டரில் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

lokesh kanagaraj

இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் லோகேஷின் திரைப்படங்கள் பெரும்பாலும் ஒரே நாளில் நடப்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கும். அதன்படி, கைதி திரைப்படத்தை போலவே, இந்த திரைப்படமும் ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.