சினிமா

தலைவர் 169; தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்! உறுதியான தகவல்!!

Summary:

தலைவர் 169; தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்! உறுதியான தகவல்!!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய பல மொழிகளிலும் உலகெங்கும் வெளியானது.

பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தை இயக்கவுள்ளதாக  அறிவிப்பு வெளியானது. ஆனால் சமீபத்தில் தலைவர் 169 படத்தின் இயக்குநரை ரஜினிகாந்த் மாறியுள்ளதாக தகவல்கள் பெருமளவில் பரவி வந்தது. இதுகுறித்த ஹேஷ்டாக்கும் உருவானது.

இந்த நிலையில் தற்போது தலைவர் 169வது படத்தை இயக்குனர் நெல்சன்தான் இயக்க உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் நெல்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சுயவிவரத்தில் தலைவர் 169 படத்தை மீண்டும் இணைந்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement