தமிழகம் சினிமா

தல பொங்கலா.. தலைவர் பொங்கலா.. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் விஸ்வாசம், பேட்ட.!

Summary:

thala pongala - thalivar pongala all fans bg moment

வரும் பொங்கலுக்கு யாருடைய படம் அதிக வரவேற்பை பெரும் என்ற போட்டி நிலவி வருகிறது. இதில் நேற்று தணிக்கை குழு விஸ்வாசம் படத்திற்கு வழங்கியுள்ள சான்றிதழலால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் படையை கொண்டவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தல அஜித். இவர்களில் ஒருவரது படம் வெளியானாலே தமிழகத்தில் திருவிழா போல தான் இருக்கும். ஆனால் இருவரின் படங்களும் ஓரே நேரத்தில் வெளியானால் சொல்லவா வேண்டும். 

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இருவேடங்களில், மதுரை, கிராமத்து பிண்ணனியில் அஜித்தின் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் வரும் பொங்கல் தல பொங்கல் தான் என அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். 

இந்நிலையில் ரஜினியின் பேட்ட திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், அஜித் மற்றும் தல ரசிகர்களிடையே போட்டிகள், கருத்து மோதல்கள் சமூக வலைத்தளத்தில் பெருக தொடங்கிவிட்டது. "இந்த பொங்கல் தல பொங்கலா, தலைவர் பொங்கலா" என விவாதம் நடத்தும் அளவிற்கு ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

அதிலும் தினமும் இரண்டு படங்களை பற்றிய ஏதாவது ஒரு செய்தியை வெளியிட்டு ரசிகர்களை எந்நேரத்திலும் பரபரப்பில் வைத்திருக்கும் யுக்தியை படக்குழுக்கள் மிகவும் சிறப்பாக கையாண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று அஜித்தின் விஸ்வாசம் படத்தை பற்றிய ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை ரஜினியின் பேட்ட படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தல கெத்து காட்டிவிட்டார் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

அஜித் படம் என்றாலே எப்போதும் எந்தவித அச்சமுமின்றி குடும்பத்துடன் சென்று பார்க்கலாம். அந்த விஷயத்தை விஸ்வாசம் படத்திலும் தொடர்ந்துள்ளார் இயக்குனர் சிவா. இந்த படத்திற்கு தணிக்கை குழுவானது 'U' சான்றிதழை அளித்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி பேட்ட படத்திற்கு 'U/A' சான்று வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement