சினிமா

படம் பார்க்கவந்து, தலைதெறிக்க ஓடிய தல ரசிகர்கள்! காரணம் என்ன? வைரலாகும் வீடியோ!

Summary:

thala fans run happily inside the theatre

சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த  திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனை உலகளவில் ரசிகர்கள் திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர்.

மேலும் பல திரையரங்குளில் ஸ்பெஷல் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் ரசிகர்கள் தூக்கமின்றி இரவு முதலாக திரையரங்கு முன் காத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை இலங்கையில் உள்ள திரையரங்கு ஒன்றின் முன் காத்திருந்த ரசிகர்கள் கேட்டை திறந்தவுடன் பெரும் ஆரவாரத்துடன் உள்ளே கூட்டம் கூட்டமாக ஓடுகின்றனர்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement