சினிமா

ட்விட்டரில் மோதும் பேட்ட, விஸ்வாசம்!. ட்வீட்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!.

Summary:

thala ajith and rajini fans shared twit


தமிழ் சினிமாவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விஸ்வாசம். 

இப்படத்தின் ட்ரைலர் கடந்த டிசம்பர் 30-ம் தேதி யூ ட்யூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் வெளியான வீடியோக்களில் படு வைரலானதும் அஜித்தின் விஸ்வாசம் பட டிரைலர்தான் என கூறப்பட்டது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி.10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி பற்றியும், அந்த படங்களை புகழ்ந்தும் ட்விட் பதிவுகள் வெளியாகி வருகின்றது.

ஏற்கனவே ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ திரைப்படங்களின் டிரைலர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இரு படங்கள் தொடர்பான ட்வீட்களையும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.  


Advertisement