சினிமா

விஜய் சேதுபதியுடன் நடிப்பது உண்மைதான்! சீக்ரெட்டை போட்டுடைத்த பிரபல நடிகை! செம ஹேப்பியில் ரசிகர்கள்!

Summary:

Tapsee said about act with vijay sethupathi

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் நடிகை  டாப்ஸி. அதனை தொடர்ந்து அவர் காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை டாப்ஸி தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் நடிகை டாப்ஸி தற்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதையிலும், தமிழில் ஜெயம் ரவியுடன் ஜன கண மன என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

அதனை தொடர்ந்து டாப்ஸி பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை  இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார். அவர் இயக்குனரும் பிரபல நடிகருமான சுந்தரராஜனின் மகனாவார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கௌரவ தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வந்தது.  இதுகுறித்து நடிகை டாப்ஸி பேட்டி ஒன்றில் கூறியதாவது, நடிகர் விஜய் சேதுபதியுடன் நான் இணைந்து நடிக்கவிருப்பது உண்மைதான். ஒரு வருடத்திற்கும் முன்பே  இப்படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடக்கவிருக்கிறது. இது ஒரு முழு நீள காமெடி திரைப்படமாகும் என கூறியுள்ளார். 


Advertisement