டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவாக மாறும் தனுஷ் பட நாயகி!! வெளியான சூப்பர் தகவல்!

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவாக மாறும் தனுஷ் பட நாயகி!! வெளியான சூப்பர் தகவல்!


tapsee-going-to-act-in-sania-mirza-biopic

 சினிமா துறையில் அண்மைக்காலமாக அரசியல் தலைவர்கள், சாதனை படைத்த பிரபல விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் வாழ்க்கை படமாக்கப்படுவது அதிகமாகிக் கொண்டு வருகிறது. இதற்கு முன்பு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது வாழ்க்கை படமாக உருவானது. மேலும் பல பிரபலங்களின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் வாழ்க்கை படமாக தயாராகவுள்ளது. சானியா மிர்சா இந்தியாவிற்காக விளையாடி, பல பெருமைகளை சேர்த்துள்ளார். மேலும் அவர் பத்மஸ்ரீ , பத்மபூஷன் என ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

sania mirza

இந்நிலையில் தற்போது சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. இதில் அவரது சிறுவயது வாழ்க்கை, விளையாட்டில் அவர் படைத்த சாதனை என அனைத்தும் இடம்பெற உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் சானியாவாக நடிக்க நடிகை டாப்சியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை டாப்ஸி தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறான சபாஷ் மித்து எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.